Sunday, July 5, 2009

Nervous Nail-Biting Wimbeldon 2009

Back from a spectacular event of it's kind. Tennis cathedral, Wimbeldon.

Things were easy before start of the Wimbeldon 2009 for Fedex as Rafa was missing in action consecutive grand slams.

But the 15 most grand slams record was not that easy when Andy Roddick was making in-roads. It was a total class of a tennis final. As the commentator was saying the the tickets spectators got worth it.

I follow keenly the tennis matches from my early days starting from our national television channel Doordarshan. It was always nice to see women's events [not because of the reasons you guess quickly] but because of the rally they play.

This rally would not last long when it comes to men's singles, as there was always motive to cut-short and win quickly.

But this time around during Wimbeldon 2009 it was altogether a different men's final. No one was giving room to let the other take advantage of other's point loss. Perhaps, till the end of the fourth set. But things went awry as Andy Roddick was sweating a lot and Roger Federer losing his cool by playing whole lot of miss hits and long shots.

When the thrilling five setter was on, technically capitalisation of Roddick's fault was not with Federer. It seemed his brain had become too fat to think further. At one point of time the match tilted almost towards Roddick. But the man who let his cool down most of the time, held it at the demanding moment.

It should not have been a long wait for Federer. It eventually had his pregnant wife sitting clueless what's going to happen next, that most part of the match commentators felt she should not have been there.

All yester year legends of the likes of McEnroe, Sampras were watching the same thrilling moments which they had rendered to spectators earlier.

People would be proud of saying that they were there at that moment.

Friday, June 26, 2009

Dangerous Thriller Wacko Jacko Stopped Dancing

I got up today hearing the news of MJ's death. It was shocking I did not move from my seat for quite sometime keenly watching different news channels.

What made this impact?
I had been brought up with little exposure to hi-fi kind of life style from my young age. But in my Grandma's place where my sister had been brought up [separate from our parents by my Grandma to raise my sister in her custody], she would get what she wanted from my uncle [father's younger brother].

She had a bit of modern lavishing, still conservative, life style because of her friend's circle and the locality she had been used to. That must have influenced her interest for MJ's albums.

My sister had pasted a poster of MJ, no one opposed. But we as a little kids would tease her craze for MJ, by calling him as E*n*c*. But later some point of time no one can escape from his music and movement majic after witnessing for the first time.

This happened to me as well. I had chances to hear Dangerous, Thriller, would try to read the lyrics in tandem while playing the track.


MTV was becoming popular by 90's when national channel DD would telecast one hour songs program every day in the evening. It was[is even more] mandatory for albums to display mouth-to-mouth kiss, and scanty attires of artist. It's not much pronounced in MJ's lists I had watched. So need to have a privacy watching his albums for fear of sudden such scenes.

Had I had no knowledge of music albums and dance movements of MJ's I would not have know about nowaday's AR Rehman's track imitation of Dangerous pieces included in his early days of film music and picturization of Prabhu Deva's song sequences.

Even MJ imitated MoonWalker, but he practiced it to perfection.

Now he has stopped dancing.

He revolutionized the music, graphics world. Made money for charity thereby creating Guinness Record and same for many other disciplines.

Today the search engines slowed down to mourn his death, websites crashed, blogs poured in. Mine is one of a kind.

"Just call my name, I will be there" "Heal the world to make it a better place" "This is it, this really is it"

Thursday, April 9, 2009

நம்ம ஊரு பெங்களூரூ -கோடை விடுமுறைக் கட்டுரை


முன்னுரை :

எனது தாயாரின் சொந்த ஊரான பெங்களூரூவுக்கு வருடா வருடம் ஏப்ரல் மாதங்களில் செல்வது வழக்கமான ஒன்று. அங்கு எனது தாயாரின் உடன்பிறந்தோர் வசிக்கின்றனர். மேலும் ஏப்ரல் மாதத்தில் தேர்த்திருவிழா அங்குபிரசித்தம். எனது இளம்பிராயத்தில் அஙகு விடுமுறைக் காலங்களை கழித்தது மாறா நினைவுகளாக இன்றும் என் மனதில் நிறைந்திருக்கிறது.

பயண ஏற்பாடுகள் :

சென்றமுறை தொடர்வண்டி பயணச் சீட்டு முன்பதிவு செய்யாததினால் ஏற்பட்ட அசௌகரியங்களை இம்முறை தவிர்த்தோம். தோ்வு நடைபெறும் காலம் என்பதினால் பயண நாளுக்கு ஒரு வாரம் முன்னதாகவே அதிகமான சீட்டுகள் இணையதளத்தில் இருந்தன. அலுவலகத்திற்கு மூன்று நாட்கள் (திங்கள்,செவ்வாய்,புதன்) விடுப்புக்கு அனுமதி கிடைக்கப்பெற்று, பயண நாளாம் ஏப்ரல் 3-ம் தேதியை எதிர்பார்த்திருந்தேன்.

பயண நாள் அனுபவம்:

காலை ஏழு பதினைந்து மணிககு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ். காலை உணவு பயணநேரத்தில் சாப்பிட தயார் செய்து எடுத்துக் கொண்டோம். வீட்டைவிட்டு காலை ஆறு பதினைந்து மணிக்கு கிளம்பினோம். கோடம்பாக்கத்திலிருந்து பேருந்து மூலமாக சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை அடைந்தோம். அப்பொழுது மணி 6:50 இருக்கும். கோடை வெயிலின் தாக்கம் நன்றாகத் தெரிய ஆரம்பித்தது.

முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் என்றாலும் இரயில்வே பணியாளர்கள் அல்லாத பிற நபர்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். போகப் போக முக்கிய சந்திப்புகளில் முன்பதிவு செய்யாதவர்களகூட ஏறிக் கொண்டனர்.

அரக்கோணம் தாண்டியதும் காலை உணவு சாப்பிட்டோம். ஆம்பூரை நெருங்கியதும் முருங்கைக்காய், மற்றும் முள் கத்தரிக்காய் ஆகியவற்றை வாங்கிக் கொண்டோம். சரியாக மதியம் 1:30 மணிக்கு பெங்களூரூ கண்டோன்மண்ட்டை அடைந்தோம்.

தங்குமிடக் குறிப்பு:

என் தாயாரின் சகோதரி (சித்தி)வீடு சிவாஜி நகர் என்ற இடத்தில் உள்ளது. சிவாஜிநகர் தமிழர் காலம் காலமாய் அதிக மாக வாழும் இடம். முன் கட்டண தானி (ஆட்டோ) மூலம் 5 நிமிடத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடத்தை அடைந்தோம். நடைபயணம் செய்தால் 10 நிமிடத்திற்குள் சென்றுவிடலாம். ஆனால் கையில் பயண பெட்டிகள், பைகள் இருந்ததினாலும், வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் தானியில் பயணித்தோம்.

நான் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சொந்த விஷயத்திற்காக ஏற்கெனவே பெங்களூரூ சென்றிருந்ததால் தற்பொழுது சித்தி குடியிருந்த புது வீட்டிற்கு செல்வது சிரமமாக இல்லை.சித்தியின் மகன் ஸ்ரீகாந்த் எங்களை வரவேற்றான். அவன் கல்லூரி இறுதி ஆண்டு பயின்று கொண்டிருந்தான். கடையில் தந்தைக்குஉதவியாகவும் இருந்தான். மதிய உணவுக்கு பிறகு வீட்டு விஷயங்களை அளவளாவிய பின்னர் சிறிது ஓய்வெடுத்தோம்.

சாயங்காலம் சிறு உலா:

அந்திப் பொழுது நானும் என் தாயாரும் அருகே உள்ள தர்மராஜா கோவிலுக்கு சென்றோம். எனது கைகடிகாரம் பழுது நீக்குவதற்காக முன்னர் பார்த்துவந்த கடையை தேடினோம். ஆனால் கடை மூடி இருந்தது. பின்னர் வீட்டிற்கு வந்துவிட்டோம். இரவுப்பொழுது கழிந்தது.

மறுநாள் திட்டம்:

எப்பொழுதும் போல் காலை 4:50 மணிக்கு எழுந்திருக்கலாம் என்றால் பிரயாணம் களைப்பு மற்றும் பெங்களூரூவுக்கே உரித்தான காலை தட்ப வெப்பம் நிலைதவிர்த்தது. இது போதாதென்று அங்குள்ள தெரு நாய்கள். அவைகள் உடலளவில் நம்ம தெரு நாய்களைவிட ஒன்றரை மடங்கு பெரியதாக சிறு கரடிகளைப் போல் ஆஜானுபகுவான அமைப்பில் இருக்கும். இதற்கு ஒரு காரணம் அங்கு நிறைய மாட்டிறைச்சி (கபாப்) கடைகள் இருப்பதாலும், சமிபத்தில் அரசாங்கம் அவைகளுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஊசிகளை போட்டதாலும் இருக்கலாம்.ஒரு வழியாக 5:45 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு வீட்டினருகே உள்ள கோல்ஸ் பார்க் (COLES PARK) சென்றேன். அங்கு நடைபயிற்சி செய்தேன்.

சிறுவயதில் இந்த பூங்காவிற்கு வந்த ரூசிகர சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. அப்பொழுது நாங்கள் செப்பிங்ஸ் ரோட்டில் இருந்தோம். நான் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். என் மாமா பிள்ளைகள் அக்கம்பக்கத்திலிருந்த பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். எங்களுக்குள் கோல்ஸ் பூங்கா செல்ல திட்டமி்ட்டு பெரியோர் யாரும் அறியாவண்ணம் நடந்துசென்றோம். செப்பிங்ஸ் ரோட்டின் முடிவு கோல்ஸ் பூங்கா சந்திப்பை அடையும். அங்கு சென்று நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை. எங்களின் பெற்றோர்கள் எங்களை தேடிக்கொண்டிருந்தனர், ஒரு வழியாக அக்கம் பக்கத்தில் விசாரித்து நாஙகள் இருந்த இடத்தை அடைந்தனர். பின்னர் என்ன ஆகியிருக்கும் என்பதை ஊகிகத்து கொள்ளுங்கள்.

தற்பொழுதைய கால நிலைக்கு வருவோம். அந்தக் காலைப் பொழுதில் பூங்காவிற்கு அருகே உள்ளோர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அங்கு ஸ்கேடிங்கிற்கான திடலும் இருந்தது. நான் நடைபயிற்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினேன். சிறிது யோகா பயிற்சிக்கு பிறகு குளித்துவிட்டு, காலைஉணவு உண்டேன். பிறகு இந்திராநகரில் உள்ள எனது மாமன் வீட்டிற்கு செல்ல எனது தாய் தம்பியருடன் சிவாஜிநகர் பேருந்து பணிமனைக்கு சென்றோம். அங்கிருந்து 330 தடம் எண் கொண்ட பேருந்தில் தொம்மலூர் என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து சிறிது நடையாக மாமன் வீட்டை அடைந்தோம். அவர்களுடைய வீட்டிற்கு சுண்ணாம்பு அடித்து கொண்டிருந்த வேளையில் சென்றதால் சிறிது அசௌகரியம். அவர்களுடைய மகன் சமிபத்தில் டிசிஎஸ்-ல்பயிற்சி முடித்துவிட்டு அன்றுதான் வந்திருந்தான்.

வீட்டில் சமையல் கிடையாது என்பதாலும் மாமன் மகன் வேலை பெங்களூருக்கு மாற்றப்பட்டதாலும் எங்களுக்கு சமீபத்தில் உள்ள நந்தினி ரெஸ்ட்டாரன்டில் மதிய உணவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்திராநகரில் அவர்களுடைய வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் வொயிட் ஃபில்டு,கோரமங்கலா ஆகிய இடங்கள் இருக்கின்றன. அங்கிருந்து சற்றுதொலைவில் எச்.ஏ. எல். இருக்கிறது. அங்கு தெருவுக்கு தெரு எதாவது ஒரு மென்பொருள் நிறுவனம் இருக்கும்.

மதிய உணவுக்கு பின் நாங்கள் அங்கிருந்து தானி மூலமாக மீண்டும் சிவாஜி நகருக்கு வந்து சேர்ந்தோம். இரவுப் பொழுது முடிந்தது.

இரண்டாம் நாள்:

திங்கட்கிழமை காலை எழுந்து எப்பொழுதும் போல் நடைபயிற்சி முடித்து, குளித்து விட்டு காலை உணவு அருந்தியப்பின் நானும் என் சித்தியும் அங்குள்ள மார்கெட் போக கிளம்பினோம். வழியில் முன்னர் கைகடிகாரம் சரிபார்க்க தவறிய கடைக்கு சென்று பழுது நீக்கிவிட்டு , மார்க்கெட் சென்றோம். எனக்கு பிடித்தமான வெஜிடேபிள் ரைஸ்-க்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு மேலும் என் சித்தப்பா நடத்தும் ரிடைல் கடைக்கான சாமான்களையும் வாங்கிக் கொண்டு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்பொழுது வெயிலின் தாக்கம் ஒரு தர்பூசணி பழம்வாங்க வைத்தது. 6 கிலோ தாளும் அந்தப் பழம் 55ந்து ரூபாய்க்கு வாங்கினோம். பின்னர் வீட்டிற்கு வந்து அனைவரும் அந்தப் பழத்தினை சாப்பிட்டோம். வெஜிடேபிள் ரைஸ்-க்கான வேலைகள் முடிந்து மதிய உணவும் பரிமாரப்பட்டது. சிறிது ஓயவுக்குப் பின்னர், சாயந்திர வேலையில் செப்பிங்ஸ் ரோட்டில் முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்களை பார்க்கச்சென்றோம். பின்னர் அங்கு பிரசித்திப்பெற்ற முத்தயாளம்மன் கோவிலுக்குசென்று சாமியை தரிசித்தோம். தேர்திருவிழாவிற்கு இரண்டு நாட்களே இருந்தநிலையில் அங்கு ஏற்பாடுகள் களைகட்ட ஆரம்பித்தது.


மூன்றாம் நாள்:

கோவில் விழாவிற்கு முதல் நாள் என்பதால் வீட்டிலிருந்து மாவிளக்கு போட ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. என் தாயாரும் சித்தியும் கோவிலுக்கு சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்கள் வந்ததும் காலை உணவு முடித்துவிட்டு சிறிது வெளியே சென்றோம். விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு மாநில காவல்துறையினர் கண்காணித்துக்கொண்டிருக்க வழியெங்கிலும் தோரணம், மேடைகள், கடைகள் போன்றவை அமைத்துக்கொண்டிருந்தார்கள்.

பின்னர் வீட்டிற்கு வந்து மதிய உணவு முடித்து சிறிது ஓய்வு எடுத்துவிட்டு நானும் என் தாயாரும் ஹலசூருக்கு நடையாகச் சென்றோம். சிவாஜிநகரில் இருந்து நிறைய பேருந்துகள் இருந்தாலும் தற்பொழுது அங்கு மெட்ரோ இரயில்திட்டத்திற்காக சாலைகள் பல ஒரு வழி ச்சாலைகளாக மாற்றியிருந்தார்கள். மேலும் கால்வாய்கள் வெட்ட சாலைப்பணிகள் நடைப்பெற்றிருந்ததாலும் நேரத்தில் செல்வது என்பது சிறிது சிரமம். அதற்கு பதில் நடை பயணமாக 20-30 நிமிடத்தில் ஹலசூரு ஏரி வழியாக மார்கெட் அடைந்தோம்.


ஹலசூரு (அல்சூர் - ULSOOR/HALASURU):



சிவாஜி நகர் போலவே ஹலசூரும் தமிழர்கள் அதிகம் வாழும் இடம். அங்கும் கோவில்களுக்கு குறைவில்லை. நாங்கள் நேராக சோமேஸ்வரர் ஆலயம் சென்றோம். சென்ற நேரம் 4 மணி என்பதால் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. அந்தக் கோயிலின் தேரோட்டமும் சிறப்பு வாய்ந்தது.



சரியாக 4:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. எங்களின் நோக்கம் கடவுளை தரிசித்துவிட்டு உடனே அங்குள்ள மற்றக் கோயில்களை பார்ப்பதுதான். ஆனால் எங்களுக்கே தெரியாது அன்று பிரதோஷம் என்று. நிறைய பேர் அபிஷேகத்திற்கு காத்திருந்தனர்.

இங்கு கன்னடர்களின் பக்தி நெறியை சொல்லியாக வேண்டும். ஆந்திராவில் வைஷ்ணவ கோயில்களுக்கு எவ்வாறு மதிப்பளிக்கிறார்களோ அதைப் போன்று கர்நாடகாவில் சிவபெருமானுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். வடக்கு வடமேறகு கர்நாடகாவில் அதிகம் பேர் சிவனை வழிபடுகிறார்கள், அதில் லிங்காயத்துக்காரர்கள் ஒரு பிரிவினர்.




சோமேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் அன்று நாங்கள் சென்றது பெருத்தமகிழ்ச்சி. என் தாயாருக்கு முன் வரிசையில் இடம் கிடைக்க, நான் அருகே நின்றுகொண்டேன். பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், ருத்ராட்ச அபிஷேகம் ஆகியவற்றை தரிசித்தேன். பக்தர்களில் அங்கு வாழ் தமிழர்களும், கன்னடர்களும் கலந்திருந்தனர்.அனைத்து அபிஷேகமும் முடிந்து சுவாமி அலங்காரத்திற்காக திரைசாத்தபட்டதும், தமிழர்களோடு கன்னடர்களும் சிவபுராணம் எடுத்துக்கொண்டு "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவாபோற்றி போற்றி" என்று வணங்கிவிட்டு அனைவரும் திருவாசகம் படித்தது ஒருபுதிய உணர்வாகவே இருந்தது.






அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வெளியே வந்தோம். அங்கு முக்கியமான மற்றும் ஓரு
கோயில் கெம்பம்மா அம்மன் ஆலயம். ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் அந்தக்கோவில் அமைந்துள்ளது. ஓல்டு மெட்ராஸ் ரோட்டில் மெட்ரோ இரயிலுக்காக பாதைகள் அகலப்படுத்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. கெம்பம்மாகோயில் சென்று தரிசித்துவிட்டு அங்குள்ள மர்ஃபி டவுன் அருகே அமைந்துள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு செல்லலாம் என்றால் நேரமாகிவிடும் என்பதால் மீண்டும் ஹலசூரு பஜார் தெரு வழியாக வந்தோம். வரும்போது முன்னர்பார்க்கத் தவறிய ஆஞ்சநேயர் மற்றும் வேணுகோபாலசுவாமி கோவில்களை தரிசித்தோம்.



மேற்கொண்டு வந்த வழியே பயணித்த போது ஹலசூரு ஏரி அருகே உள்ள ஓடுக்கத்தூர் மடத்தை அடைந்தோம். அங்கு முன்னர் ஒரு சாமியார் சமாதி நிலைஅடைந்து இருந்தார். வேறுவழியில் சிவாஜி நகர் அடையலாம் என்று எண்ணி வழியை தவறவிட்டு லாவண்யா திரைஅரங்கு இருக்கும் வழியில் சென்றுவிட்டோம். அப்போது அயன் படம் பார்த்துவி ட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர் மக்கள். தமிழ்த் திரைப்படங்களுக்கு கர்நாடகாவில் கடும்கெடுபிடி. இருந்தாலும் அங்கு வாழ் தமிழர்கள் தவிர கன்னடர்கள் வடநாட்டவர் என அனைவரும் இந்தி மற்றும் ஆங்கிலப் படம் அளவிற்கு வரவேற்பு அளிப்பார்கள்.

பின்னர் இரவு 8 மணிக்கு வீடு திரும்பினோம். இரவு உணவு முடிந்து அன்றையபொழுது நிறைவுற்றது.

ஐந்தாம் நாள் (திருவிழா):

மறுநாள் வழககம் போல் என் பணிகளை முடித்துக் கொண்டு எனது தாயாருடன் முத்தயாளம்மன் ஆலயத்திற்கு செல்ல தீர்மானித்தோம். வழி எங்கும் கடைகள்களைகட்டி இருந்தன. தெருவெங்கும் பானகமும், குளிர்பானமும், மோரும் மக்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு அரசாங்க உத்தரவால் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருந்ததோடு அல்லாமல் நேற்றைய பொழுதுவரை இருந்த கபாப் மற்றும் பிரியாணி செண்டர்கள் மூடப்பட்டு, அதற்கு பதில் வெளியே வெஜிடேபிள் சாதம் செய்து கொண்டிருந்தனர். சிவாஜி நகர் இஸ்லாமியரகளும் தமிழர்களும் அதிகம் காணப்படும் இடம். காவேரி பிரச்சினை வந்தபோதெல்லாம் இரு சார்பினரும் ஒற்றுமையுடன் கன்னட வெறியர்களை எதிர்த்ததுண்டு. இஸ்லாமியர்களின் பஙகளிப்பு இந்த விழாவில் நன்கு தெரிந்தது. அவர்களும் வெஜிடபிள் பிரியாணி செய்தனர், இன்னும் சிலர் கூழ், இனிப்பு, கிச்சடி போன்ற உணவுகளை செய்து மக்களுக்கு பகிர்ந்து அளித்தனர்.



இதையெல்லாம் பார்த்து சும்மா இருக்க முடியுமா நானும் ஒரு பதம் பார்த்தேன். தேர் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். சுமார் 3 மணி அளவில் என்னுடைய பெரிய மாமன் மற்றும் மாமிவீட்டிற்கு வந்தார்கள் எங்களோடு அவர்களும் தேர் பவனி வருவதை பார்க்கவந்திருந்தனர். சுமார் 5 மணிக்கு பெரிய தேர் வீதி உலா வந்தது "கோவிந்தா கோவிந்தா" என்று பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துவர அருகே இருந்த மக்கள் உப்பும் வாழைப்பழமும் எடுத்து தேரின் கோபுரம் மீது வீசிக்கொண்டிருந்தனர்.




நானும் என் பங்கிற்கு வாழைப்பழங்களை தேரின் உச்சியின் மீது வீசினேன். அதன்பின்னர் சிறிய தேர் வந்தது. அதற்கும் மக்களிடம் அதே உபசரிப்பு. அனைத்தும் முடிந்து சாமிகள் கோவிலை அடைந்தன. அன்றைய இரவுப் பொழுதே எனது இரயில் பிரயாணம் இருந்ததால் பூ பல்லக்கு பார்ப்பது இயலாமல் போனது.

சென்னைப் பயணம்:

எனது சகோதரனும் தாயாரும் மறுநாள் இரயில் பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததால் நான் மட்டும் இரவு பத்து மணி போல் பெங்களூரூ கண்டோன்மெண்ட்டை அடைந்தேன். அங்கு சுமார் 10:30 மணி அளவில் சென்றுசேர்ந்தேன். எனது தொடர்வண்டியின் பெயர் காவேரி. மைசூரிலிருந்து பெங்களூரூ வழியாக சென்னை செல்லும் வண்டி அது. நான் தனியாக அமர்ந்துஇருந்தேன். தொடர்வண்டி வரும் வரை பொழுது கழிவது மிகவும் மெதுவாக இருந்தது. திடீரென்று எனது இருக்கைப் சற்றுப் பக்கத்தில் அதே வண்டியில் ஏறுவதற்கு ஒரு பெண்ணும் அமர்ந்திருந்தாள். வாரக் கடைசி விடுமுறைகளை சென்னையில் அவளுடைய பெற்றோருடன் கழிக்க திட்டமிட்டுருந்தாள் போல்உள்ளது. அவ்வளவு நிசர்ந்தப்பமான நேரத்தில் செல்பேசியில் அந்தப் பெண் தன்தோழிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தது நன்றாக கேட்டது. ஏன் பெங்களூரூவில் பெண் எடுக்க கூடாது என்று சிலர் கூறியதற்கான விடைகிடைத்தது.

சரியாகப் பண்ணிரெண்டு மணிக்கு தொடர்வண்டி வர அதில் ஏறி படுத்துக்கொண்டேன். மறுநாள் காலை சென்னை அடைந்தேன்.